Tamil Christian songs | Lyrics | Chords | Bible
Thagappanae - தகப்பனே
OPENING
நடைபினமா திரிந்தேன் ஐயா
பெயர் சொல்லி அழைத்தீர் ஐயா
விலகித்தான் சென்றேன் ஐயா
என்னை தேடி வந்தீர் ஐயா
CHORUS
தகப்பனே தகப்பனே தாங்கும் நல்ல தகப்பனே -2
தாயின் கருவில் தெரிந்தவரே -2
STANZA 1
உலகத்தின் பார்வையில் ஒதுக்கப்பட்டேன்
பலவீனமாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டேன்
சாத்தானின் கட்டுகளால் இழுக்கப்பட்டேன்
நாவின் வார்த்தைகளால் நொறுக்கப்பட்டேன்
தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
மகனாக என்னை சேர்த்து கொண்டீரே -2
STANZA 2
அற்பமான என்னையும் கூட
தேடி வந்தீரே தயவினால
பாவத்தின் வாழ்வை மாற்றி தந்தீரே
பரிசுத்த ஆவியின் வரங்களை தந்தீரே
STANZA 3
கதறி அழுத காலங்கள் மாற்றினீர்
விழியின் கண்ணீரை துடைத்து தேற்றினீர்
தனிமையின் நேரத்தில் வியப்பில் ஆழ்த்தினீர்
தரிசனம் தந்து தகுதி படுத்தினீர்
Comments
Post a Comment